கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு மேலும் ரூ.7 லட்சம்


கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு மேலும் ரூ.7 லட்சம்
x
தினத்தந்தி 3 April 2022 1:34 AM IST (Updated: 3 April 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு மேலும் ரூ.7 லட்சம் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை, 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2011-ம் ஆண்டு ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அவர்களின் விசாரணையிலும் திருப்தி ஏற்படவில்லை என்று கொலையுண்ட சிறுமியின் தந்தை தங்கள் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார்.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் குடும்பத்தினருக்கு ஏற்கனவே இடைக்கால நிவாரணமாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் குடும்பத்தினருக்கு மேலும் ரூ.7 லட்சத்தை நிவாரணமாக 2 மாதத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story