சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை
சாத்தூர் அருகே சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் கந்தகுமார் (வயது 26). இவர் சென்னை சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். ஊருக்கு வந்திருந்த இவர் திடீரென விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. மயங்கிய நிலையில் கிடந்த அவரை உடனே அருகில் உள்ளவர்கள் மீட்டு சாத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கந்தகுமாரின் சகோதரர் பாண்டித்துரை சாத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story