கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது
கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாங்குநேரி:
நாங்குநேரி போலீசார் அங்குள்ள அரசு பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவரை சோதனை மேற்கொண்டதில் அவர் கஞ்சா பொட்டலம் வைத்திருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா இலைகள் 2 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குமரி மாவட்டம் இடலாகுடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முகமது அசன் மகன் முகமது நசீர் (வயது 20) என்பதும், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது நசீரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story