‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 3 April 2022 1:47 AM IST (Updated: 3 April 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடை 

சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் ஸ்ரீராம்நகாில் நெடுஞ்சாலையில் இருந்து நகருக்குள் செல்லும் சாலையின் தொடக்கத்தில் பெரிய அளவில் வேகத்தடை உள்ளது. இதனால் இந்த வழியாக ெசல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி  சாலையின் குறுக்கே உள்ள பெரிய வேகத்தடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                        பாரதராஜன், காரைக்குடி. 

பராமரிப்பற்ற நிழற்குடை 

மதுரை மாவட்டம் பேரையூா் வட்டம் குடிப்பட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடையில் ஒரு சிலர் மது அருந்தி விட்டு பாட்டில்களை அப்படிேய விட்டு, விட்டு செல்கின்றனர். இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பெண்களும், முதியவர்களும் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் வெயில் நிற்கும் சூழல் உருவாகி உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி நிழற்குடை பராமரிப்பதுடன், மது போன்ற தீய செயல்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜதுரைபாண்டியன்,பேரையூர். 

கூடுதல் மின்மாற்றி வேண்டும்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா டி.கிருஷ்ணாபுரம் கிராமம் கிழக்கு தெரு பகுதியில் 500-க்கும் ேமற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால் மின் உபயோக பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றனா். இந்த பகுதியில் கூடுதல் மின்மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாபு, வத்திராயிருப்பு.

சேதமடைந்த சாலை 

மதுரை மாநகர் ேக.புதூர் ஐ.டி.ஐ. பஸ் நிறுத்தத்திலிருந்து ெதாழிற்பேட்டை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு,சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
முத்துகிருஷ்ணன், மதுரை. 

வேகத்தடை தேவை 
சிவகங்கை மாவட்டம் கல்லல் இந்திரா நகர் பஸ் நிறுத்தம் அருகில் ேவகத்தடை இல்லை. எனவே இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன். இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து, சிவகங்கை. 

சுகாதார சீர்கேடு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்  குமரன் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீரானது சாலைகளில் தேங்கியுள்ளது. தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.
ராஜேஷ், ராஜபாளையம்.

பயணிகள் அவதி 
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு எல்.ஐ.சி. பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தால் பஸ்சிற்காக காத்திருக்கும் கர்ப்பிணிகளும், முதியவர்களும் கடும் வெயிலில் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனக்குமார், மதுரை.  

Next Story