சாலை பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க கோரி பொதுமக்கள் முற்றுகை


சாலை பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க கோரி பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 April 2022 1:48 AM IST (Updated: 3 April 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

சாலை பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்:

பொதுமக்கள் முற்றுகை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த சின்னவளையம் கிராமத்தில் திருச்சி -சிதம்பரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக, விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கோரி நிலத்தை கொடுத்த விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நேற்று சாலை பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தைக்கு...
இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் அங்கு வந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் நிலம் கொடுத்தவர்களை, வருகிற 7-ந் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story