ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தினர் தர்ணா


ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தினர் தர்ணா
x
தினத்தந்தி 3 April 2022 2:54 AM IST (Updated: 3 April 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு
ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 
கர்ப்பிணி மரணம்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் அர்ச்சனா சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து உள்ளார். ஆனால் அதிக ரத்தப்போக்கு காரணமாக அந்த கர்ப்பிணி  சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் போலீசார் அந்த பெண் டாக்டர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண் டாக்டர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் பெண் டாக்டர் தற்கொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தர்ணா போராட்டம்
அதன்படி ஈரோடு மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில், ஈரோடு காளைமாடு சிலை அருகே நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் சி.என்.ராஜா தலைமை தாங்கினார். மாநில தலைவர் அபுல்ஹாசன் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட டாக்டர்கள், பெண் டாக்டர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story