குரங்கன் ஓடையில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு: ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
குரங்கன் ஓடையில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு: ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே உள்ள கொளத்துப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தேவம்பாளையத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இதனை ஒட்டி குரங்கன் ஓடை செல்கின்றது. இந்த ஓடையின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த தடுப்பணை கட்டப்பட்டால் அருகில் உள்ள 200 வீடுகள் பாதிக்கப்படும் என இந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர், தாசில்தார், ஆர்.டி.ஓ.விடம் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் இதுவரை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆதித்தமிழர் பேரவை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக நேற்று கொளத்துப்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கதிரேசன் தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் பேரவை ஒன்றிய செயலாளர் முருகேசன், செல்வி, சித்திரா, ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில நிதி செயலாளர் பெருமாவளவன், மாநில தொழிலாளர் அணி செயலாளர் வீரகோபால், மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாவட்ட நிதி செயலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கொளத்துப்பாளையம் ஊராட்சி தலைவர் ராஜ்குமாரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story