நூல் விலை உயர்வை கண்டித்து 7-ந் தேதி பெட்ஷீட் உற்பத்தியை நிறுத்தி போராட்டம்- விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

நூல் விலை உயர்வை கண்டித்து 7-ந் தேதி பெட்ஷீட் உற்பத்தியை நிறுத்தி போராட்டம்- விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 April 2022 2:54 AM IST (Updated: 3 April 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

நூல் விலை உயர்வை கண்டித்து வருகிற 7-ந் தேதி பெட்ஷீட் உற்பத்தியை நிறுத்தி போராட்டம் நடத்துவதாக சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னிமலை
நூல் விலை உயர்வை கண்டித்து வருகிற 7-ந் தேதி பெட்ஷீட் உற்பத்தியை நிறுத்தி போராட்டம் நடத்துவதாக சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நூல்விலை அதிகரிப்பு
சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார  பகுதிகளில் நூற்றுக்கணக்கான விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகிறது. இதில் தறி ஓட்டுதல், பாவு ஓட்டுதல், பாவு பிணைத்தல், நூல் போடுதல் உள்ளிட்ட தொழில்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.‌ 
விசைத்தறி தொழிலுக்கு பயன்படும் நூலின் விலை அடிக்கடி உயர்ந்து வந்ததால் விசைத்தறி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஒரு வாரத்தில் கிலோவுக்கு ரூ.10 வரை நூலின் விலை அதிகரித்ததால் உற்பத்தி செய்யும் ரகங்களுக்கு ஆகும் செலவுகளுக்கு ஏற்ப பெட்ஷீட் ரகங்களை விற்பனை செய்ய முடிவதில்லை என விசைத்தறி உரிமையாளர்கள் கூறி வந்தனர்.
அடையாள வேலை நிறுத்தம்
இந்தநிலையில் சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் பொன்.ஈஸ்வரமூர்த்தி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். 
இந்த கூட்டத்தில், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாக பெட்ஷீட் உற்பத்தியை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story