ஓமலூர் அருகே பஸ் கண்ணாடியை உடைத்த 5 பேர் சிக்கினர்


ஓமலூர் அருகே  பஸ் கண்ணாடியை உடைத்த 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 3 April 2022 3:27 AM IST (Updated: 3 April 2022 3:27 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே பஸ் கண்ணாடியை உடைத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்
ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் ரோட்டில் மூங்கில் ஏரி அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் அரசு டவுன் பஸ் மற்றும் சங்ககிரியில் இருந்து ஓமலூருக்கு வந்த ஒரு அரசு பஸ் ஆகியவற்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 6 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி சென்றனர்.
அப்போது ரோட்டில் பழைய டயர்களை போட்டு எரித்துவிட்டுஅந்த வழியாக வந்த ஆம்புலன்சை நிறுத்தி 3 பேரும், மோட்டார் சைக்கிளில் 3 பேரும் தப்பிச் சென்றனர். பஸ் கண்ணாடியை உடைத்த அவர்கள், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோஷமிட்டு பஸ் கண்ணாடியை உடைத்ததாக கூறி அரசு பஸ் டிரைவர்கள் ஓமலூர் போலீசில் புகார் கொடுத்திருந்தனர். இதன் பேரில் ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தொல்காப்பியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் பஸ் கண்ணாடியை உடைத்த 5 பேர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருப்பதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை பிடித்தனர். அவர்களை விசாரணைக்காக ஓமலூர் கொண்டு வருகின்றனர். இதில் அவர்கள் முத்துநாயக்கன்பட்டி கார்த்தி காடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 34), அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (24), மற்றும் விக்னேஷ் (18), பழையூர் சத்திரம் செங்கனூர் பகுதியை சேர்ந்த வேல் (42), சூரமங்கலம் பழையூர் வேடி தெரு பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (33) ஆகிய 5 பேர் என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் எதற்காக பஸ் கண்ணாடியை உடைத்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story