தரமணியில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்


தரமணியில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்
x
தினத்தந்தி 3 April 2022 3:52 PM IST (Updated: 3 April 2022 3:52 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கிடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது.


இது குறித்து தகவல் அறிந்த தரமணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையில் போலீசார் சட்டக்கல்லூரிக்கு சென்றனர். அப்போது அங்கு சீனியர், ஜூனியர் மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் தாக்கி கொண்டிருந்தனர். அங்கிருந்து மாணவர்களை கலைந்து போக செய்த போலீசார், பிரச்சினைக்கு காரணமான சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story