ஆற்காடு கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கலெக்டர் பாராட்டினார்.
ஆற்காடு
கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கலெக்டர் பாராட்டினார்.
ராணிப்பேட்டை மாவட்ட அளவில் சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழகம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் பங்களிப்பு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.
பேச்சுப்போட்டியில் 3-ம் ஆண்டு இயற்பியல் துறையை சேர்ந்த மாணவன் ஆர்.கார்த்திகேயன் முதல் பரிசும், ஓவியப் போட்டியில் 3-ம் ஆண்டு இயற்பியல் துறையை சேர்ந்த எஸ்.சதீஷ் 3-ம் பரிசும், கட்டுரைப் போட்டியில் 2-ம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவன் எம். ஹீமாயூன் 3-ம் பரிசும் பெற்றனர்.
இவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார். பரிசு பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் விதமாக ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவன தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி வாழ்த்தி பேசினார்.
மேலும், கல்லூரி செயலாளர் ஏ.என்.சங்கர், பொருளாளர் ஏ.என்.சரவணன், மேனேஜிங் டிரஸ்டி ஏ.என்.செல்வம், கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி மற்றும் பேராசிரியர்களும் மாணவர்களை பாராட்டிப் பேசினர்.
Related Tags :
Next Story