சென்னை விமான நிலையத்தில் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்க நடவடிக்கை
சென்னை விமான நிலைய ஆணையகம் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுய உதவிக்குழுக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சென்னை விமான நிலையத்தில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக உள்நாட்டு விமான புறப்பாடு பகுதியில் 100 முதல் 200 சதுர அடி வரை கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதில் கடைகளை அமைக்க இந்திய விமான நிலைய ஆணையத்தின் இணைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும். ஒரு சுய உதவிக் குழுவுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அதன்பின், வேறு சுய உதவிக்குழுவுக்கு அனுமதி வழங்கப்படும். அனைத்து உதவிக்குழுக்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக சுழற்சி முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story