சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம்
ஆரணி அருகே சிவசுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சுபான்ராவ்பேட்டை கிராமத்தில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணியசாமி கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதேபோல் கிராம தேவதையான மூசாத்தம்மன் கோவில், தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், கெங்கையம்மன் கோவில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஆகிய கோவில்களும் புதுப்பித்து ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
முன்னதாக கோவில் வளாகத்தில் யாக மேடைகளும், யாக குண்டங்களும் அமைக்கப்பட்டு 1,008 கலசங்களில் புனிதநீர் நிரப்பி சரவணன் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க 5 கால யாக ஹோம பூஜைகளை நடத்தினர்.
பின்னர் பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை கோவில் ராஜகோபுரம், கொடிமரம், தர்ம சாஸ்தா அய்யப்பன் சாமி, ெகங்கையம்மன் கோவில், மூசாத்தம்மன் கோவில், பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் கே.பி.கே.செல்வராஜ் ஆகியோருக்கு கோவில் சார்பாகவும், கிராம மக்கள் சார்பாகவும் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story