கோத்தகிரியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி
கோத்தகிரியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. இதில் ெஜகதளா, கெந்தொரை அணிகள் வெற்றி பெற்றன.
கோத்தகிரி
கோத்தகிரியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. இதில் ெஜகதளா, கெந்தொரை அணிகள் வெற்றி பெற்றன.
கால்பந்து லீக் போட்டி
நீலகிரி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவில் ஏ, பி மற்றும் சி டிவிஷன் கால்பந்து லீக் போட்டிகள் வழக்கமாக ஊட்டியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் விளையாட்டு வீரர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு டிவிஷன் லீக் போட்டிகளில் விளையாடும் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த அணிகளுக்கான போட்டிகளை கோத்தகிரி பகுதியிலும், கூடலூர் பகுதியைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் போட்டிகளை கூடலூரிலும், மற்ற போட்டிகளை ஊட்டியிலும் நடத்த நீலகிரி கால்பந்து கழகம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக கோத்தகிரி காந்தி மைதானத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 'சி' டிவிஷன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நீலகிரி எப்.சி அணி
இந்தநிலையில் 4 போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் ஜெகதளா மற்றும் ஜக்கனாரை கால்பந்து அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் 1-0 என்கிற கோல் கணக்கில் ஜெகதளா அணி வெற்றி பெற்றது. 2 -வது போட்டி ரிவர்சைடு பள்ளி அணி மற்றும் கெந்தொரை விங்ஸ் அணிகள் விளையாடின. இதில் 1 கோல் போட்டு கெந்தொரை அணி வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் அனிக்கொரை மற்றும் லிட்டில் ஸ்டார்ஸ் ஊட்டி அணிகள் விளையாடிய போட்டியில் அணிக்கொரை அணி 9 கோல்கள் போட்டு வெற்றி பெற்றது.
கடைசி ஆட்டத்தில் ஊட்டியை சேர்ந்த நீலகிரி எப்.சி மற்றும் நீலகிரி அகாடமி ஆகிய அணிகள் பங்கேற்றன. இதில் நீலகிரி எப்.சி அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story