வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி
வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெண்டைக்காய் பயிரிடப்படுகிறது, வெண்டைக்காய்சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் வெண்டைக்காய் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. வெண்டைக்காய் பறிப்பவர்களுக்கு கையில் அரிப்பை ஏற்படுத்தும். இதனால், வெண்டைக்காய் பறிக்க கூலித்தொழிலாளர்கள் விரும்பமாட்டார்கள். இதனால் விவசாயிகளே வெண்டைக்காய்களை பறிப்பார்கள். இந்த வருடம் அதிகமான விளைச்சல் காரணமாக வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சிலர் உழவர் சந்தையில் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், அனைவராலும் நேரடி விற்பனை செய்ய விவசாயிகளுக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால் மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். பெரிய வியாபாரிகள் ஒரு கிலோ 5 ரூபாய்க்கு மட்டுமே வெண்டைக்காய் கொள்முதல் செய்கின்றனர். உற்பத்தி செலவைவிட வெண்டைக்காய் விலை குறைந்த விலைக்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story