ரோட்டோரத்தில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு


ரோட்டோரத்தில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 3 April 2022 6:13 PM IST (Updated: 3 April 2022 6:13 PM IST)
t-max-icont-min-icon

ரோட்டோரத்தில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

பல்லடம் அருகே, ரோட்டோரத்தில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு.பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அண்ணாநகர் பகுதியிலிருந்து லட்சுமி நகர் செல்லும் வழியில் ரோட்டோரங்களில் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். இதுகுறித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது. இங்கு ரோட்டோரத்தில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது இங்குள்ளவர்கள் யாரும் ரோட்டோரங்களில் குப்பை கொட்டுவது இல்லை, கம்பெனிகளில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் இரவு நேரங்களில் குப்பைகளை வீசி செல்கிறார்கள். இதனால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் ஏற்படுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.சில நேரங்களில் குப்பைகளில் தீ வைத்து விடுகின்றனர். இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு கண்ணெரிச்சல் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படுகிறது.எனவே அதிகாரிகள் இங்கு குப்பைகளை கொட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 24வது வார்டு, இ.பி காலனி மெயின் ரோடு  தண்ணீர் தொட்டி அருகில் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. ஏற்கனவே வார்டு பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் என்ற நிலை உள்ளது. இ.பி. காலனி மக்கள் பலர் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக தனியாரிடம் தண்ணீர் லாரி மூலம் விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறார்கள்.  எனவே இதனை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வார்டு பகுதியில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்புகளை  சீரமைக்க வேண்டும் என்று பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Next Story