உடுமலையில் பெட்ரோல் விலை ரூ.109.83 க்கு விற்பனை


உடுமலையில் பெட்ரோல் விலை ரூ.109.83 க்கு விற்பனை
x
தினத்தந்தி 3 April 2022 6:33 PM IST (Updated: 3 April 2022 6:33 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் பெட்ரோல் விலை ரூ.109.83 க்கு விற்பனை

உடுமலையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.109.83 ஆக இருந்தது. கடந்த 13 நாட்களில் ஒரு லிட்டருக்கு ரூ.7.54 உயர்ந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு 
பொதுமக்களுக்கு வாகனம் என்பது இன்றியமையாததாகி விட்டது. இருசக்கர வாகனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சில வீடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன.  கார்களின் எண்ணிக்கையும் முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 75 பைசா உயர்ந்து வருகிறது.
உடுமலையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நேற்று ஒருலிட்டர் பெட்ரோல் விலை 109 ரூபாய் 83 பைசாவாக இருந்தது. கடந்த 13 நாட்களில் ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் 54 பைசா உயர்ந்துள்ளது.
இதேபோன்று டீசல்  விலையும் தினசரி 75 பைசா உயர்ந்துவந்துள்ளது. நேற்று ஒருலிட்டர ்டீசல் 99 ரூபாய்91 பைசாவாக இருந்தது. கடந்த 13 நாட்களில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் 59 பைசா உயர்ந்துள்ளது
வாகன ஓட்டிகள் வேதனை
கொரோனா தொற்று தொடங்கியதற்கு பிறகு, இருசக்கர வாகனங்களில் பணிக்கு செல்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் சிறிது தூரம் செல்வதென்றாலும் இருசக்கர வாகனத்தில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையுமடைந்துள்ளனர்.
அதேபோன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அவற்றின் உரிமையாளர்களும் வேதனையடைந்துள்ளனர். இந்த நிலையில் பங்குகளுக்கு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் அளவு முன்பை விட குறைந்து வருவதாகக்கூறப்படுகிறது.

Next Story