கல்வி உதவித்தொகை விருது பெற விண்ணப்பிக்கலாம்
கல்வி உதவித்தொகை விருது பெற விண்ணப்பிக்கலாம்
மீனவ, பழங்குடி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
மீனவர் சமுதாய மாணவர்கள்
மீனவர் குடும்பத்தை சேர்ந்த பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு, 1 பவுன் தங்கம் கல்வி உதவித்தொகையாக அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, அரசு ஆதரவற்றோர் பள்ளி, மாநகராட்சி பள்ளி, நகராட்சி பள்ளி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 60 சதவீதம் மொத்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தமிழ் வழியில் கல்வி படித்தவர்கள் தகுதியான மாணவர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு அனுமதிக்கப்படும். முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் அனைத்து பாடங்களிலும் 50 சதவீதம் மொத்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அரசு கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பழங்குடி மாணவர்கள்
இதுபோல் பழங்குடி மக்களில் எஸ்.டி. பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு, 1 பவுன் தங்கம் வழங்கப்படும். அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, அரசு ஆதரவற்றோர் பள்ளி, மாநகராட்சி பள்ளி, நகராட்சி பள்ளி ஆகிய ஏதேனும் ஒன்றில் படித்து பிளஸ் 2 தேர்வில் 60 சதவீதம் மொத்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தமிழ் வழியில் கல்வி படித்தவர்கள் இல்லையென்றால் ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு அனுமதிக்கப்படும். வேளாண்மை, வனம், தோட்டக்கலை, மீன்வளம் சார்ந்த ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் அனைத்து பாடங்களிலும் 60 சதவீதம் மொத்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அரசு கல்லூரியில் படிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story