பீல்டு மார்ஷல் சாம் மானெக்சா கல்லறையில் மரியாதை


பீல்டு மார்ஷல் சாம் மானெக்சா கல்லறையில் மரியாதை
x
தினத்தந்தி 3 April 2022 6:47 PM IST (Updated: 3 April 2022 6:47 PM IST)
t-max-icont-min-icon

பீல்டு மார்ஷல் சாம் மானெக்சா கல்லறையில் மரியாதை செலுத்தப்பட்டது.

ஊட்டி

இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் சாம் மானெக்சா 3.4.1914 அன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பிறந்தார். 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற சாம் மானெக்சா முக்கிய பங்கு வகித்தார். அவரது சிறந்த பங்கை அங்கீகரிக்கும் வகையில் பீல்டு மார்ஷல் என்ற ஐந்து நட்சத்திர அந்தஸ்தை பெற்ற முதல் இந்திய ராணுவ அதிகாரி ஜெனரல் மானெக்சா என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன் விளைவாக 12 நாட்களுக்குள் இன்றைய வங்காளதேசம் விடுவிக்கப்பட்டது. . 40 ஆண்டுகள் ராணுவ வாழ்க்கையில் ஈடுபட்டார், அவர் சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய போர்கள் மற்றும் 1947, 1965, 1971-ல் போர்கள், 1962-ம் ஆண்டு சீன போரில் வெற்றி பெற சிறப்பாக செயல்பட்டார். இந்தியாவின் 2-வது உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருது பெற்றார். 15.1.1973 அன்று ஓய்வு பெற்ற அவர் வெலிங்டன் கன்டோன்மென்ட்டுக்கு அடுத்துள்ள குன்னூரில் வசித்தார். முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் தளபதியாக பணிபுரிந்தார். 2008-ம் ஆண்டு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இறந்தார். 

பீல்டு மார்ஷல் சாம் மானெக்சாவின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு, முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி சார்பில் ஊட்டியில் உள்ள அவரது கல்லறையில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Next Story