சொத்து வரியை உயர்த்தி தி.மு.க. அரசு மக்களை வஞ்சித்து விட்டது ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சொத்து வரியை உயர்த்தி தி.மு.க. அரசு மக்களை வஞ்சித்து விட்டது என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
போடி:
போடி பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் நீர்,மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நகர செயலாளர் பழனிராஜ் தலைமை தாங்கினார். நீர்,மோர் பந்தலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் போடி எம்.எல்.ஏ.யுமான ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
நீர்,மோர் பந்தலில் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு இளநீர், வெள்ளரி, தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது. பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை தி.மு.க. அரசு அளித்தது. தற்போது தி.மு.க. அரசு சொத்து வரியை உயர்த்தி தமிழக மக்களை வஞ்சித்து விட்டது. இது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் என்றார்.
விழாவில் மாவட்ட செயலாளர் சையதுகான், போடி ஒன்றிய செயலாளர் சற்குணம், வக்கீல் கோபிநாத், சரவணநதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் சில்லமரத்துபட்டி மற்றும் சிலமலை பகுதிகளில் நீர்,மோர் பந்தலை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
Related Tags :
Next Story