தூத்துக்குடியில் சிறுவனுக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
தூத்துக்குடியில் சிறுவனை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியை சேர்ந்த 19 வயது சிறுவன், தூத்துக்குடியில் உள்ள டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது சகோதரியுடன் சக்திவிநாயகர்புரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் முத்துராமன் (வயது 28), முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராம்குமார் (22) ஆகியோர் பழகி வந்தார்களாம். கடந்த சில நாட்களாக இவர்களுடன் அந்த பெண் பேசுவதை தவிர்த்து வந்தாராம். இதற்கு அந்த சிறுவன்தான் காரணம் என்று நினைத்த முத்துராமன், ராம்குமார் ஆகியோர் சிறுவனை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துராமன், ராம்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story