திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிர்களுக்கு டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு


திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிர்களுக்கு டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு
x
தினத்தந்தி 3 April 2022 8:08 PM IST (Updated: 3 April 2022 8:08 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிர்களுக்கு டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கு நோய் தாக்குதல் அதிகம் என்பதால் அடிக்கடி பூச்சி மருந்து தெளிக்க வேண்டும். பூச்சி மருந்து தெளிப்பதற்கு அதிக செலவு ஏற்படுவதோடு கால விரயமும் ஏற்படுவதால் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் திருவள்ளூரை அடுத்த தலக்காஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி டிரோன் எந்திரத்தை பயன்படுத்தி தோட்டப்பயிர்களுக்கு மருந்து தெளித்தார். இதை அறிந்து திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் கிராமம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் என்ஜீனியரின் பட்டதாரி வாலிபரை தொடர்பு கொண்டு தலக்காஞ்சேரி பகுதிக்கு வரவழைத்தனர். பின்னர் அவருடைய உதவியுடன் அந்த பகுதிகளில் உள்ள நெற்பயிருக்கு டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் டிரோன் மூலம் மருந்து தெளிக்க முடிவதால் இந்த கருவியை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story