ரெயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணி எதிரொலி; மைசூரு-பெலகாவி ரெயில் 6 நாட்கள் ரத்து


ரெயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணி எதிரொலி; மைசூரு-பெலகாவி ரெயில் 6 நாட்கள் ரத்து
x
தினத்தந்தி 3 April 2022 9:16 PM IST (Updated: 3 April 2022 9:16 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணி எதிரொலியாக மைசூரு-பெலகாவி ரெயில் 6 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  பிடதி-கெஜ்ஜாலா இடையே ரெயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணி நடக்க உள்ளது. இதன் எதிரொலியாக ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்விவரம் வருமாறு:-
  மைசூரு-கே.எஸ்.ஆர்.பெங்களூரு மெமு ரெயில் (வண்டி எண்:-06560) வருகிற 5-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. கே.எஸ்.ஆர். பெங்களூரு-மைசூரு மெமு ரெயில் (06559) வருகிற 6-ந் தேதி ரத்தாகிறது. அதுபோல மைசூரு-பெலகாவி இடையே தினசரி இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17326) வருகிற 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 6 நாட்களும், பெலகாவி-மைசூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (17325) வருகிற 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 6 நாட்களும் ரத்தாகிறது.
  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story