ராணுவ வீரர் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு


ராணுவ வீரர் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 3 April 2022 9:34 PM IST (Updated: 3 April 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே ராணுவ வீரர் வீட்டில் 3 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரம் ஜெயம் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). ராணுவ வீரரான இவர், காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு வைஜெயந்திமாலா (37) என்ற மனைவியும், பிரதீப் (15), பிரஜித் (10) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் பொன்னகரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
பிரதீப் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வைஜெயந்திமாலா, தனது 2-வது மகன் பிரஜித்தை அழைத்துக்கொண்டு குஜிலியம்பாறையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக சென்றார். பிரதீப் பள்ளிக்கு சென்றுவிட்டார். இதனால் அவர்களது வீடு பூட்டிக்கிடந்தது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டுக்குள் தகர பெட்டியில் வைத்திருந்த 3 பவுன் நகையை திருடி சென்றனர்.
இதற்கிடையே பிரதீப் பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அவர் தனது தாய் வைஜெயந்திமாலாவுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது 3 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து வைஜெயந்திமாலா திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story