வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி பகுதிகளில் 5-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்


வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி பகுதிகளில் 5-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 3 April 2022 9:45 PM IST (Updated: 3 April 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி பகுதிகளில் 5-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆர்.கோம்பை, புளியம்பட்டி, வடுகம்பாடி, குஜிலியம்பாறை, பாளையம், ஆர்.புதுக்கோட்டை, பில்லமநாயக்கன்பட்டி, கோவிலூர், உசிலம்பட்டி, குளத்துப்பட்டி, வள்ளிபட்டி, சத்திரப்பட்டி, சின்னலூப்பை, அழகாபுரி, ஆர்.வெள்ளோடு, குவாரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கோவிலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதேபோல் வடமதுரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடமதுரை, புத்தூர், போஜனம்பட்டி, காணப்பாடி, வேலாயுதம்பாளையம், மோர்பட்டி, ஆலம்பட்டி, சடையம்பட்டி, தென்னம்பட்டி, பிலாத்து, அழகர்நாயக்கன்பட்டி, வெள்ளபொம்மன்பட்டி, ஊராளிபட்டி, தும்மக்குண்டு, சீத்தப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் சாணார்பட்டி அருகே வி.குரும்பபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கோபால்பட்டி, சாணார்பட்டி, வேம்பார்ட்டி, மணியகாரன்பட்டி, ராமராஜபுரம், முளையூர், சக்கிலியன்கொடை, கோணப்பட்டி, ராகலாபுரம், சில்வார்பட்டி, மருனூத்து, ஆவிளிப்பட்டி, ஒத்தக்கடை, மேட்டுப்பட்டி, காவேரிசெடிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

Next Story