போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசாரம்


போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 3 April 2022 9:45 PM IST (Updated: 3 April 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு பகுதியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

வாய்மேடு:
தலைஞாயிறு போலீஸ் துறை சார்பில் மணக்குடியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி முன்னிலை வகித்தார். 
இதில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இதை விற்பது குற்றமாகும் என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் கூறினர். நிகழ்ச்சியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், சந்திரமோகன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல வடுகூர், ஆய்மூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனபாக்கியம் ராதாகிருஷ்ணன், சாந்தி விஜயராகவன் ஆகியோர் தலைமையில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Next Story