விபத்துகளை தடுக்க ஒளிரும் மின்விளக்குகள்


விபத்துகளை தடுக்க ஒளிரும் மின்விளக்குகள்
x
தினத்தந்தி 3 April 2022 10:03 PM IST (Updated: 3 April 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நகரில் விபத்துகளை தடுக்க ஒளிரும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

விழுப்புரம், 

விழுப்புரம் நகரில் உள்ள சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இவ்வாறு வாகனங்களில் செல்வோர் சில சமயங்களில் அவசர, அவசரமாக செல்கிறோம் என்ற பெயரில் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் அதை மீறி அஜாக்ரதையாக செல்கின்றனர். இதன் காரணமாக விபத்துகளும் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறி செல்வதால் விபத்து ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் போதிய மின்விளக்கு இல்லாமல் வெளிச்சம் குறைவாக உள்ளதே விபத்துக்கு மற்றொரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. 

எனவே விபத்தை தடுக்க ஒளிரும் மின்விளக்குகளை பொருத்த வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுறுத்தினார். அதன்அடிப்படையில் விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார், விழுப்புரம் நகரில் நான்குமுனை சந்திப்பு, பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம், அரசு மருத்துவமனை அருகே மற்றும், இ.எஸ். மருத்துவமனை அருகில், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் விபத்துகளை தடுக்கும் வகையில் ஒளிரும் மின்விளக்குகளை பொருத்தியுள்ளனர்.

Next Story