கார் மோதி ஒருவர் பலி
மயிலம் அருகே கார் மோதி ஒருவர் பலியானார்.
மயிலம்,
மயிலம் அருகே உள்ள செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ராஜாராம் (வயது 42). சம்பவத்தன்று இவர் செண்டூரில் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று ராஜாராம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜாராம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story