கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 April 2022 10:10 PM IST (Updated: 3 April 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

மயிலாடுதுறை
மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் சாலை நகராட்சி குப்பை கிடங்கு அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் அய்யப்பன் (வயது 31) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story