பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய ஆண் உடல் யார் அவர்? போலீசார் விசாரணை

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய ஆண் உடல் யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 April 2022 10:26 PM IST (Updated: 3 April 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய ஆண் உடல் யார் அவர்? போலீசார் விசாரணை

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் பெருமாள் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையோரம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் கருப்பு நிற பேண்டும், டி-சர்டும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. 
இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து ெகாண்டாரா? தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story