வரதராஜ பெருமாள் கோவிலில் திருகல்யாண உற்சவம்
வரதராஜ பெருமாள் கோவிலில் திருகல்யாண உற்சவம் நடந்தது.
வேலாயுதம்பாளையம்,
புகழூர் வட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி சேங்கல் மலையில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருகல்யாண உற்வசம் நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி மணகோலத்தில் மணமேடையில் அமர்ந்து இருந்தனர். இவர்களுக்கு யாக குண்டம் வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் ஓதப்பட்டது. பின்னர் மணமகன் வரதராஜ பெருமாள் பல்லாக்கில் அமர வைக்கப்பட்டு மேளதாளத்துடன் மணமேடைக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
பின்னர் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் இருவருக்கும் கழுத்தில் வரதராஜ பெருமாள் திருமாங்கலயம் கட்டினார். பின்னர் மணமக்களை ஊஞ்சலில் அமர வைத்து உற்சவம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story