காங்கிரஸ் தவிர்க்க முடியாதது ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக விருப்பமில்லை- சரத்பவார் பேட்டி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 3 April 2022 10:55 PM IST (Updated: 3 April 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தவிர்க்க முடியாதது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக தனக்கு விருப்பமில்லை என சரத்பவார் கூறியுள்ளார்.

மும்பை, 
காங்கிரஸ் தவிர்க்க முடியாதது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக தனக்கு விருப்பமில்லை என சரத்பவார் கூறியுள்ளார்.
விருப்பமில்லை
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று கோலாப்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைவராக விருப்பமில்லை என்றார். இதேபோல பா.ஜனதாவுக்கு எதிரான மாற்று சக்தியை காங்கிரசை தவிர்த்து உருவாக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:- 
சமீபத்தில் எங்கள் கட்சியை சேர்ந்த இளைஞர் அணியினர் நான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். அந்த பதவியில் எனக்கு விருப்பமில்லை. அதில் நான் தலையிட போவதில்லை. அந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இதேபோல பா.ஜனதாவுக்கு எதிரான எந்த ஒரு அணியையும் வழிநடத்தப்போவதில்லை.
காங்கிரஸ் வேண்டும்
அதே நேரத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக மாற்று சக்தியை உருவாக்கினால் நான் ஆதரவு அளித்து, பலப்படுத்த தயாராக இருக்கிறேன். பா.ஜனதாவுக்கு எதிரான அணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு மாநிலம், மாவட்டம், கிராமத்தில் காங்கிரஸ் தொண்டனை நாம் பார்க்க முடியும். அது தேசிய கட்சி. நாட்டில் ஒரு கட்சி மட்டும் பலமானதாக இருந்தால், அது ரஷியாவின் புதின் போல மாறிவிடும். 
புதினும், சீன அதிபரும் உயிருடன் உள்ளவரை அவர்கள் நாட்டை வழிநடத்த முடியும். இந்தியாவில் அது போன்ற புதின் இல்லை என நம்புகிறேன். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story