பொன்னமராவதி அருகே செவலூரில் மீன்பிடி திருவிழா போட்டி போட்டுக்கொண்டு மீன் பிடித்தனர்


பொன்னமராவதி அருகே  செவலூரில் மீன்பிடி திருவிழா போட்டி போட்டுக்கொண்டு மீன் பிடித்தனர்
x
தினத்தந்தி 3 April 2022 11:08 PM IST (Updated: 3 April 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

பொன்னமராவதி அருகே செவலூரில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பொதுமக்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன் பிடித்தனர்.

பொன்னமராவதி:
மீன்பிடி திருவிழா 
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே செவலூர் செவிலிகண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். 
இதயைடுத்து செவலூர் ஊராட்சி செவிலிக்கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் செவலூர், மலையடிப்பட்டி, குழிபிறை, பனையப்பட்டி, ஆத்தூர், வீரராணாம்பட்டி, செம்பூதி, ஆலவயல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தா, வலை, தூரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர்.
சமைத்து சாப்பிட்டனர் 
இதில் பொதுமக்கள் போட்டி போட்டு மீன்பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டனர். 

Next Story