பவாயில் தாயின் கள்ளக்காதலனை குத்திக்கொன்ற வாலிபர் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 3 April 2022 11:10 PM IST (Updated: 3 April 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

தாயின் கள்ளக்காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 
தாயின் கள்ளக்காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
துப்புரவு பணியாளர்
மும்பை பவாய் பகுதியில் வசித்து வருபவர் மனிஷ் (வயது20). இவர் ராஜேஷ் வைத்தியா(47) என்பவருடன் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் ராஜேஷ் வைத்தியாவுக்கும், மனிஷின் தயாருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
இந்த கள்ளத்தொடர்பு பற்றி அறிந்த மனிஷின் மனைவி தனது கணவரிடம் இதுபற்றி தெரிவித்தார். இதனால் மனிஷ், அருகில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.
குத்திக்கொலை
அப்போது வீட்டில் ராஜேஷ் வைத்தியாவும் இருந்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனிஷ், தாயின் கள்ளக்காதலனை கத்தியால் குத்த முயன்றார். அப்போது ராஜேஷ் வைத்தியா அவரிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடினார். எனினும் அவர் துரத்தி சென்று ராஜேஷ் வைத்தியாவை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மனிச் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story