வீரமகாகாளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா


வீரமகாகாளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா
x
தினத்தந்தி 4 April 2022 12:15 AM IST (Updated: 3 April 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் வீரமகாகாளியம்மன் கோவிலில் நடந்த பால்குட திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பாபநாசம்:-

பாபநாசம் வங்காரம்பேட்டை 108 சிவாலயம் வீரமகாகாளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது. விழாவையொட்டி பாபநாசம் குடமுருட்டி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி, எடுத்து பல்வேறு வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து கஞ்சி வார்த்தலும், இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பாபநாசம், வங்காரம்பேட்டை, 108 சிவாலயம் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) துர்க்கை அம்மன் எல்லை வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) வீரமகாகாளியம்மன் படுகளம் பார்த்து வீதியுலா வருதல், திருநடன திருவிழா நடக்கிறது.

Next Story