சேப்ளாப்பட்டியில், மீன்பிடி திருவிழா
சேப்ளாப்பட்டியில், மீன்பிடி திருவிழா நடந்தது.
நச்சலூர்,
தோகைமலை ஒன்றியம் சேப்ளாப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான பெரிய குளம் உள்ளது. கடந்த ஆண்டு கனமழை பெய்ததில் இக்குளத்திற்கு மழைநீர் வந்து நிரம்பியது. இதையடுத்து குளத்தில் அதிக மீன்கள் வளர்ந்து இருந்தன. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளத்தில் மீன் பிடிக்க ஏலம் விடப்பட்டது. பின்னர் ஏலம் எடுக்கப்பட்டு பெரிய குளத்தில் மீன் பிடி திருவிழா நடத்த ஊர் முக்கியஸ்தர்கள் சார்பாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பெரிய குளத்தில் பொதுமக்கள் மீன் பிடிக்க ஊராட்சி மன்ற தலைவர் விமலா காமராஜ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அச்சு வெல்லம் வீசப்பட்டது. பின்னர் மீன் வலைகள், கொசு வலைகளை கொண்டு இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் குளத்தில் மகிழ்ச்சியுடன் மீன்களை பிடித்தனர். இதில் தனித்தனியாக அவரவர் கிலோ கணக்கில் மகிரை, ஜிலேபி, கெண்டை உள்பட பல ரக மீன்களை பிடித்து வீட்டிற்கு ஆர்முடன் எடுத்து சென்றனர். இதில் சேப்ளாப்பட்டி சுற்றுவட்டார பகுதிகைள சேர்ந்த பொதுக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story