பள்ளிபாளையம் பகுதியில் மது விற்ற 2 பேர் கைது 78 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

பள்ளிபாளையம் பகுதியில் மது விற்ற 2 பேர் கைது 78 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
x
தினத்தந்தி 3 April 2022 11:25 PM IST (Updated: 3 April 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் பகுதியில் மது விற்ற 2 பேர் கைது 78 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். பஸ் நிறுத்தம் அருகே தர்மராஜ் (வயது 23) என்பவர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது ரோந்து சென்ற பள்ளிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ராஜா மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் 18 மதுபாட்டில்கள் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் தர்மராஜை கைது செய்தனர். மேலும் அரசங்காடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (45) என்பவர் சிறிய சாக்கு மூட்டையுடன் சென்று கொண்டிருந்தார். சந்தேகப்பட்டு போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தபோது சாக்குப்பையில் 60 மது பாட்டில்கள் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சரவணனை கைது செய்தனர்

Next Story