2 கன்றுகுட்டிகளை ஈன்ற பசு


2 கன்றுகுட்டிகளை ஈன்ற பசு
x
தினத்தந்தி 3 April 2022 11:36 PM IST (Updated: 3 April 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 2 கன்றுகுட்டிகளை பசு ஈன்றது.

ஆர்.எஸ்.மங்கலம், 
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஊரணங்குடி ஊராட்சி புறகரை கிராமத்தில் ஜனவரி-2020-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வறுமையில் வாடும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இலவச கறவை மாடு வளர்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் புறகரை கிராமத்தை சேர்ந்த 25 குடும்பங்களுக்கு தலா ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான ஜெர்சி இன கறவை பசுமாடுகள் வழங் கப்பட்டது. இதில் இக்கிராமத்தைச் சேர்ந்த  ஏழுமலை செல்விக்கு வழங்கப்பட்ட பசுமாடு ஒரே நேரத்தில் 2 கன்று குட்டியை ஈன்று உள்ளது. இதை அறிந்த அந்த பகுதியினர் பசுவையும், கன்றுகளையும் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

Next Story