ஆதனக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; வாலிபர் பலி
ஆதனக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஆதனக்கோட்டை:
ஆதனக்கோட்டை அருகே கணபதிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் மணிமாறன் (வயது 27). சம்பவத்தன்று இவர், மீனம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். தொண்டைமான் ஊரணி அருகே வந்தபோது, ஆயிப்பட்டியை சேர்ந்த கருப்பையா (47) என்பவர் ஓட்டிவந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மணிமாறனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமாறன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story