அன்னவாசல் பகுதியில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி


அன்னவாசல் பகுதியில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 4 April 2022 12:05 AM IST (Updated: 4 April 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்னவாசல்:
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகைக்கு முன்பு 30 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பு இருப்பது வழக்கம். அதன்படி முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், இலுப்பூர், பரம்பூர், வயலோகம், குடுமியான்மலை, பெருமநாடு, காலாடிப்பட்டி, சத்திரம், ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள முஸ்லிம்கள் கடந்த சனிக்கிழமை இரவு முதல் சிறப்பு தொழுகையுடன் நோன்பை வைக்க தொடங்கினார்கள். இந்த நோன்பானது அதிகாலை முதல் மாலை வரை கடைப்பிடிப்பது வழக்கம். அதனை தொடர்ந்து மாலையில் நோன்பு திறக்கப்படும். அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி பேரிச்சம்பழங்களை வைத்து நோன்பு திறந்தனர்.

Next Story