அந்தியூர் அருகே மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது
அந்தியூர் அருகே மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
மாணவிக்கு தொல்லை
அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி முரளி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருடைய மகன் விஜய் (வயது 24). கூலித்தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவர் 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் விஜயை பல முறை கண்டித்து வந்துள்ளார். எனினும் அவர் தொடர்ந்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
போக்சோவில் கைது
இதுகுறித்து மாணவியின் தந்தை வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.
பின்னர் அவர் பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பவானியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story