தர்மபுரி அருகே ஸ்டூடியோவில் 2 கேமராக்கள் திருட்டு
தர்மபுரி அருகே ஸ்டூடியோவில் 2 கேமராக்கள் திருட்டு போனது.
தர்மபுரி:
தர்மபுரி அண்ணா நகரை சேர்ந்தவர் ராகுல் (வயது 22). இவர் பழைய தர்மபுரி ரவுண்டானா அருகில் போட்டோ ஸ்டூடியோ கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு ராகுல் வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது அங்கு இருந்த 2 கேமராக்கள், லென்ஸ், பிளாஸ் லைட் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story