தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம்


தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 4 April 2022 12:12 AM IST (Updated: 4 April 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம் நடந்தது.

தர்மபுரி:
தர்மபுரி வெளிப்பேட்டை தெரு வாணியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் அங்காளம்மன் கோவில் திருப்பணி குறித்த ஆலோசனை கூட்டம் சங்க தியான மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வாணியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க தலைவராக கந்தசாமி, துணைத்தலைவராக நாகராஜன், கவுரவ தலைவராக வேணுகோபால், பொது செயலாளராக ரமேஷ்பாபு, துணை செயலாளராக இளங்கோவன், பொருளாளராக உமாசங்கர், ஆலோசகர்களாக சதீஷ், ஆறுமுகம், லோகநாதன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் திருப்பணி மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கோவில் வளாகத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். சேதமடைந்த சிலைகளை சீரமைக்க வேண்டும். கோவில் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Next Story