15 டன் முருங்கைக்காய் கொள்முதல்!


15 டன் முருங்கைக்காய் கொள்முதல்!
x
தினத்தந்தி 4 April 2022 12:13 AM IST (Updated: 4 April 2022 12:42 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவிலில் வாரச்சந்தையில் 15 டன் முருங்கைக்காய் கொள்முதல்.

வெள்ளகோவில், 

வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த  கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். 

அதன்படி நேற்று 75 விவசாயிகள் 15 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடி முருங்கை ரூ.10க்கும், மரம் முருங்கை ரூ.11க்கும், கரும்புமுருங்கை ரூ.17க்கும் கொள்முதல் செய்தனர். 


Next Story