இலங்கை வீதிகளில் பொதுமக்கள் போராட்டம்


இலங்கை வீதிகளில் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 April 2022 12:13 AM IST (Updated: 4 April 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை வீதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்

ராமேசுவரம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் கடந்த சில வாரங்களாகவே அரிசி, காய்கறி, மண்எண்ணெய், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். 
இதனிடையே இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான இலங்கை அரசை கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதில் மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டதுடன் ஏராளமான வாகனங்கள் தீ வைத்தும் எரிக்கப்பட்டன. இதன் எதிரொலியாக இலங்கை அரசு அவசர நிலை பிரகடனம் பிறப்பித்தது. நேற்று மாலை முதல் நாளை (திங்கட்கிழமை) காலை வரை முழு ஊரடங்கும் அறிவித்துள்ளது.
இருப்பினும் நேற்று பல்வேறு இடங்களில் பொதுமக்கள் இலங்கை அதிபருக்கு எதிரான பதாகைகளுடன் நின்று போராட்டங்களில் ஈடுபட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள 15 மணி நேர தொடர் மின்வெட்டு காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story