புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
இட்டமொழியில் திருமணமான 6 மாதங்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:
இட்டமொழியில் திருமணமான 6 மாதங்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மின்வாரிய ஊழியர்
நெல்லை மாவட்டம் இட்டமொழி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 24). இவர் இட்டமொழியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வெங்கடேசுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை மனைவியும், தாயாரும் கண்டித்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்த வெங்கடேஷ் நேற்று முன்தினம் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்த வெங்கடேசின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதங்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story