மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்போராட்டம் நடத்தி தடுக்க வேண்டும்- மணியரசன்


மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்போராட்டம் நடத்தி தடுக்க வேண்டும்- மணியரசன்
x

மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்போராட்டம் நடத்தி தடுக்க வேண்டும் என தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் கூறினார்.

வல்லம்:-

மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்போராட்டம் நடத்தி தடுக்க வேண்டும் என தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் கூறினார்.

பொதுக்குழு கூட்டம்

தமிழ் தேசிய பேரியக்கத்தின் 9-வது பொதுக்குழு கூட்டம் செங்கிப்பட்டியில் தலைவர் மணியரசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், மகளிர் பிரிவு நிர்வாகி மேரி, தஞ்சை மாவட்ட செயலாளர் வைகறை, பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி, பூதலூர் ஒன்றிய செயலாளர் தென்னவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தை தொடர்ந்து மணியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டின் தொழில் வணிக வாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். தமிழக அரசு வேலைவாய்ப்பில் 100 சதவீதம், தனியார் மற்றும் இந்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு வழங்கவேண்டும். 

மேகதாது அணை

தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்க கூடாது. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக முதல்-அமைச்சர் முழுமூச்சுடன் சட்ட போராட்டம் நடத்தி தடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் இந்திய அரசின் இனப்பாகுபாட்டு அணுகு முறையை கண்டித்து தமிழ்நாட்டு மக்கள் பேரெழுச்சியுடன் பங்குபெறும் வகையில் ‘காவிரிக்காப்பு நாள்' என்று ஒரு நாளை அறிவித்து, மக்கள் போராட்டத்தை முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும். 

கைவிட வேண்டும்

தமிழகம் முழுவதும் விவசாயிகளை பாதிக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்முதல் செய்யும் முறையை கைவிட வேண்டும். செங்கிப்பட்டி அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட காசநோய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தி, பொது ஆஸ்பத்திரியாக மறுகட்டமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story