அரசு பள்ளியில் கண்காட்சி
தாயில்பட்டியில் அரசு பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியில் திரளான பேர் கண்டுகளித்தனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்ற பணிகள் குறித்து கண்காட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கண்காட்சியினை வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மகளிர் வட்டார வேளாண்மை அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கண்காட்சியை பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் முத்துகுமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story