கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை


கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 4 April 2022 1:31 AM IST (Updated: 4 April 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

காநாடகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை.

பெங்களூரு:

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கர்நாடகத்தில் 10 ஆயிரத்து 843 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 49 பேர் உள்ளனர். வைரஸ் தொற்றால் புதிதாக யாரும் இறக்கவில்லை. 51 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 1,515 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  நேற்று பெங்களூருவில் 49 பேருக்கும், பெலகாவியில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மீதமுள்ள 28 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.


Next Story