மது போதையில் மூதாட்டியை கற்பழித்த பேரன்


மது போதையில் மூதாட்டியை கற்பழித்த பேரன்
x
தினத்தந்தி 4 April 2022 1:33 AM IST (Updated: 4 April 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

தாவணகெரே அருகே மது போதையில் மூதாட்டியை கற்பழித்த அவருடைய பேரனை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகாவில் உள்ள கிராமத்தில் 61 வயது மூதாட்டி வசித்து வருகிறார். அந்த மூதாட்டியின் 2 மகளுக்கும் திருமணமாகி விட்டது. இதன் காரணமாக அதே கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டுக்கு அந்த மூதாட்டி அடிக்கடி சென்று தூங்குவது வழக்கம். மூதாட்டியின் சகோதரி மகளுக்கு திருமணமாகி 22 வயதில் மகன் உள்ளான். அவரது பெயர் ஆஞ்சனேயா ஆகும். இந்த நிலையில், வீட்டில் படுத்து தூங்கிய மூதாட்டியை உறவு முறையில் பேரனான ஆஞ்சனேயா கற்பழித்ததாக கூறப்படுகிறது. அதாவது மது போதையில் வீட்டுக்கு வந்த அவர் தனியாக இருந்த மூதாட்டியை கற்பழித்தாக கூறப்படுகிறது. இதுபற்றி முதலில் போலீசில் எந்த புகாரும் அளிக்காமல் இருந்ததாக தெரிகிறது.

  மூதாட்டியின் கையில் முறிவு ஏற்பட்டு காயம் உண்டாகி இருந்ததால், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு காயம் குறித்து டாக்டர் மற்றும் நர்சுகள் விசாரித்த போது தான், அவர் கற்பழிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுபற்றி ஒன்னாளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஞ்சனேயாவை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story